கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக வில்வித்தை கூட்டமைப்பு, வில்வித்தைப் போட்டிகளை நடத்த தற்போது புதுவித திட்டத்தைக் கையாண்டுள்ளது. ஆனால், இந்த முறை வில்வித்தை வீரர்களுக்காக இல்லாமல், பொதுமக்கள் தங்களது நேரத்தை செலவிடுவதற்காக, ஆன்லைனில் வில்வித்தை தொடரை நடத்த திட்டமிட்டிருந்தது.
இதில், தற்போது ‘லாக்டவுன் நாக் அவுட் தொடரை’ (Lockdown Knockout tournament) இணையம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாக உலக வில்வித்தை கூட்டமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்தொடரில் விளையாடப்படும் வில்வித்தை போட்டிகளை தங்களது இணையதள பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.