தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தங்கம் வெல்வது கடினம்:மேரி கோம் கருத்து! - ஒலிம்பிக் போட்டி

டெல்லி: ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீரர் மேரி கோம், வரவிருக்கும் ஒலிம்பிக்கில் மக்கள் என்னிடமிருந்து தங்கப் பதக்கத்தை எதிர்பார்க்கின்றனர், ஆனால் அது கடினம் என்று கூறியுள்ளார்.

மோரி கோம் mary kom olympic olympic gold

By

Published : Aug 1, 2019, 4:51 PM IST

ஆறு முறை குத்துச்சண்டையில் உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், " நான் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் .ஆனால் அது அவ்வளவு எளிதல்ல" என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது

வரப்போகிற ஒலிம்பிக்கில் நான் தங்கம் வெல்லவேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்கின்றனர். தனிப்பட்ட முறையில் இது எனக்கு பெருமையாக இருந்தாலும், அந்த இலக்கை அடைய கடுமையாக உழைக்கவேண்டும்.அவ்வளவு எளிதில் அந்த இலக்கை அடைய முடியாது

மோரி கோம்

ஒலிம்பிக்கில் தகுதி பெறுவது என்பது கடினமான ஒன்று, தகுதி பெற்றுவிட்டால் படிப்படியாக நுனுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும். அப்போதுதான் சிறப்பாக செயல்படமுடியும். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய என்னால் முடிந்த முயற்சிகளை எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றார்.

மேலும் அவர், எனக்கு 48 கிலோ மற்றும் 51 கிலோ எடைப்பிரிவில் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.ஆனால் 51 கிலோ எடைப்பிரிவில் எனக்கு தற்போது நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. ஆகையால் நன்றாக பயிற்சி எடுத்து 51 கிலோ எடைப்பிரிவில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details