பர்மிங்ஹாம்:காமன்வெல்த் 2022 போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று (ஜூலை 29) தொடங்கியது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் மொத்தம் 205 பேர் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் ஆடவர் பளு தூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிச்சுற்று இன்று (ஜூலை 30) நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி பங்கேற்றார்.
இப்போட்டியில் குருராஜ், ஸ்னாட்ச் முறையில் 118 கிலோ பளுவையும், கிளீன் & ஜெர்க் முறையில் 151 கிலோ பளுவையும் தூக்கி மொத்தம் 268 கிலோவுடன் மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.
மலேசியாவின் அன்சில் பின் பிடின் முகமது 285 கிலோ பளுவை தூக்கி சாதனை படைத்தது மட்டுமல்லாமல் தங்கப் பதக்கத்தையும் வென்றார். அவரையடுத்து, பாப்புவா நியூ கினியா நாட்டின் மோரியா பாரு (273) வெள்ளி பதக்கத்தை பெற்றார்.