தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மெல்போர்னில் சர்பிங் பயிற்சிக்கு அதிநவீன செயற்கை நீரலை!

கான்பெர்ரா: மெல்போர்னில் சர்பிங் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்காகப் புதிதாக அதிநவீன செயற்கை நீரலை தொடங்கப்பட்டுள்ளது.

wave pool
அதிநவின செயற்கை நீரலை

By

Published : Dec 12, 2019, 5:39 PM IST

டோக்கியோவில் வருகிற 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் புதிதாக சர்ஃபிங் விளையாட்டை அறிமுகம் செய்துள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் சர்பிங் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்காக புதிதாக அதிநவீன செயற்கை நீரலை தொடங்கியுள்ளனர்.

இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 1000 அலைகள் வரை உருவாக்கும் தன்மை உடையது. இங்கு தொழில் வல்லுநர்கள், புதிய சர்ஃபர்ஸ் இருவரும் பயிற்சி பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிநவீன செயற்கை நீரலை

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் சர்பிங் விளையாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் மேட்டர் கூறுகையில்,"பிரபல சர்பிங் வீரர்கள் புதிய முயற்சிகளை செய்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களின் புதிய முற்போக்கான தந்திரங்களை முயற்சிப்பதற்கு சரியான விளையாட்டு மைதானம் இதுதான்" எனத் தெரிவித்தார். மேலும் சர்பிங் வீரர்கள், இந்த புதிய பயிற்சி மையத்தில் பயிற்சி செய்வதன் மூலம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும் எனக் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: லாலிகாவின் விளம்பரத் தூதராக மாறிய இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details