ஓமானில் ஆசிய நாடுகளுக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாய்மர படகுப்போட்டியில் லேசர் எஸ்.டி.டீ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்த விஷ்ணு சரவணன் முதன்முறையாக இந்தியா சார்பில் இந்த ஒலிம்பிக்கில் பங்கெடுகிறார். நேற்று வரை (ஏப்.7) மூன்றாவது இடத்தில் இருந்த சரவணன், இன்று பதக்கத்துக்கான போட்டியில் வென்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறி டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது இடத்தைப் பதிவுச் செய்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்: இரண்டாவது இந்திய மாலுமியாக தகுதிபெற்ற விஷ்ணு சரவணன்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப் போட்டிக்கு இந்திய மாலுமி விஷ்ணு சரவணன் தகுதி பெற்றுள்ளார்.
இரண்டாவது இந்திய மாலுமியாகத் தகுதிபெற்ற விஷ்ணு சரவணன்
அதே போல், நேற்று நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றின், பெண்கள் ஒற்றையர் லேசர் ரேடியல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாலுமி நேத்ரா குமணன் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். இந்தியாவில் இருந்து பாய்மர படகுப்போட்டியில் பங்கெடுக்கும் முதல் வீராங்கனை நேத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பெயர் மாற்றமா இல்லை உருமாற்றமா? பஞ்சாப் கிங்ஸ் ஒரு அலசல்