புரோ கபடி லீக் தொடரின் 7ஆவது சீசன் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் 9ஆவது லீக் போட்டியில் யு பி யோதாஅணி, யூ மும்பா அணியை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டத்தில் ரைட்டிங், டிஃபென்டிங் இரண்டிலும் யு பி யோதா அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால், முதல் பாதி முடிவில் யு பி யோதா அணி 14-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
#PKL: யூ மும்பா அணியை வீழ்த்தியது யு பி யோதா!
மும்பை: புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் யு பி யோதா அணி, 27-23 என்ற புள்ளிகள் கணக்கில் யூ மும்பா அணியை வீழ்த்தியது.
U P Yoda defeated U Mumba
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் யு பி யோதா அணி எழுச்சியுடன் விளையாடியது. இதனால், யு பி யோதா அணி 27-23 என்ற வித்தியாசத்தில் யூ மும்பா அணியை வீழ்த்தியது . யு பி அணி இப்போட்டியில் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர், அந்த அணியின் நட்சத்திர ரைடர் மோனு கோயட் . அவர் இப்போட்டியில் 6 புள்ளிகளை பெற்றார்.