தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

5ஆவது முறையாக அறுவை சிகிச்சை செய்த டைகர் உட்ஸ்! - டைகர் உட்ஸ்

நட்சத்திர கோல்ஃப் விளையாட்டு வீரரான டைகர் உட்ஸ் ஐந்தாவது முறையாக முழங்காலில் எற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

ace golf player tiger woods

By

Published : Aug 28, 2019, 1:51 PM IST

உலக கோல்ஃப் விளையாட்டின் நட்சத்திர வீரரான அமெரிக்காவின் டைகர் உட்ஸ் தனது இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார்.

தற்போது அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் முழங்காலில் ஏற்பட்ட காயத்தை சரி செய்துள்ளதாக மருத்துவர்கள் கூறிவுள்ளனர். இது முழங்காலில் அவருக்கு செய்யப்பட்ட ஐந்தாவது அறுவை சிகிச்சை ஆகும்.

இதுகுறித்து டைகர் உட்ஸ், தற்போது நடக்கும் அளவிற்கு குணமடைந்துவிட்டேன், கூடிய விரைவில் எனது பயிற்சியைத் தொடங்குவேன் என கூறியுள்ளார்.

டைகர் உட்ஸ் இதுவரை 15 முறை கோல்ஃப் விளையாட்டில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details