#Rugbyworldcup: இந்தாண்டிற்கான உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. 20 அணிகள் பங்கு பெற்ற இந்தத் தொடர் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என நான்கு குழுவாகப் பிரிந்து லீக் ஆட்டங்களில் மோதின.
தற்போது இத்தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்து ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. அந்த வகையில் ,
- குரூப் ஏ- ஜப்பான், ஐயர்லாந்து
- குரூப் பி- நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா
- குரூப் சி- இங்கிலாந்து, பிரான்சு
- குரூப் டி- வேல்ஸ், ஆஸ்திரேலியா,
ஆகிய எட்டு அணிகள் உலகக்கோப்பை ரக்பி தொடரின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று இத்தொடரின் முதல் மற்றும் இரண்டாவது காலிறுதிப் போட்டிகள் தொடங்குகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா- முதலாவது காலிறுதிப்போட்டி
இந்த காலிறுதிச்சுற்றின் முதல் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி, குரூப் டி பிரிவின் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இந்த உலகக்கோப்பை ரக்பி தொடரில் லீக் ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என சமநிலையான பலத்துடன் இருப்பதினால் காலிறுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.