ஏ.ஐ.பி.ஏ. (AIBA) சார்பில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில், 52 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் அமித் பங்கல், ஒலிம்பிக் சாம்பியன் உஸ்பெகிஸ்தானின் சோய்ரோவுடன் மோதினார். இதில், அமித் பங்கல் 0-5 என்ற கணக்கில் வெற்றியை இழந்ததால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதன்மூலம், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். அதேபோல அந்தத் தொடரில் 63 கிலோ பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் மனிஷ் கவுசிக் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், நேற்று பதக்கத்துடன் தாயகம் திரும்பிய அமித் பங்கலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.