தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாற்றத்தைக் கொண்டுவர விளையாட்டால் முடியும்: அகதிகள் படம் பற்றி அபிநவ் பிந்த்ரா

உலக அளவில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு விளையாட்டினால் முடியும் என இந்திய முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.

sports-has-power-to-bring-change-abhinav-bindra-on-helping-refugees
sports-has-power-to-bring-change-abhinav-bindra-on-helping-refugees

By

Published : Jun 16, 2020, 12:52 AM IST

ஒலிம்பிக் சாம்பியன் நிக்கோலோ காம்ப்ரியானி மூன்று அகதிகளை டோக்கியோவில் நடக்கவுள்ள 2021 ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற வைத்துள்ளார்.

இதன்மூலம் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சூடு போட்டியில் மஹ்தி, கஹவுலா, லூனா ஆகிய மூன்று அகதிகள் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்த வெப் சீரிஸ் ஒன்று டேக்கிங் ரெஃப்யூஜி (Taking Refugee) என்ற பெயரில் தொடர் வெளியாகவுள்ளது.

ஐந்து அத்தியாயங்கள் கொண்ட ஒலிம்பிக் சேனல் தொடர் திங்களன்று ஐஓசியின் உலகளாவிய ஊடக தளங்களில் ஒளிபரப்பாகிறது, இது olympicchannel.com என்ற தளத்தில் வெளியாகவுள்ளது.

2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் தொடரில் முதல்முறையாக அகதிகள் அணி என்ற குழுவினர் பங்கேற்றனர். அந்த அணி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்த்தது. தற்போது இதற்கு அடுத்தப்படியாக மூன்று பேர் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

விளையாட்டு என்பது பதக்கங்களால் உருவாகவில்லை. கதைகளால் உருவானதுதான் விளையாட்டு. அந்தக் கதையின் முடிவு சிலருக்கு நாடகம் போலவும், எதிர்பார்க்காத சோகத்தையும் அளிக்கும்.

இந்த ஆவணப்படம் பற்றி இந்திய முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா பேசுகையில், "அவர்களின் ஆவணப்படம் டேக்கிங் ரெஃப்யூஜீஸ் அறிமுகமாகும்போது, நிக்கோலோவும் நானும் ஏற்கனவே 'மேக் ஏ மார்க்' என்ற திட்டத்தை முன்னெடுத்துவருகிறோம். மேலும் ஒலிம்பிக் சாம்பியன்கள் ஈடுபடுவதையும் எதிர்கால வழிகாட்டிகளையும் பார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். உலக அளவில் பெரும் மாற்றத்தை விளையாட்டினால் கொண்டு வர முடியும்'' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details