கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 16 புள்ளிகளுடன் ஜெர்மனியின் மைக்கேல் ஸ்வால்டை முந்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அதன்படி மைக்கேல் ஸ்வால்ட் வெள்ளிப்பதக்கமும், ரஷ்யா நாட்டின் ஆர்டெம் செர்னோசோவ் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா வீராங்கனை இஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். கிரீஸ் நாட்டு வீராங்கனை அன்னா கோராக்கி தங்கப்பதக்கம் வென்று முதலிடம் பிடித்தார்.