பர்மிங்ஹாம்:காமன்வெல்த் 2022 போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று (ஜூலை 29) தொடங்கியது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் மொத்தம் 205 பேர் பங்கேற்றுள்ளனர்.இதில் ஆடவர் பளு தூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிச்சுற்று இன்று (ஜூலை 30) நடைபெற்றது.
இதில், இந்தியா சார்பில் பங்கேற்ற சங்கேத் சர்கர் மொத்தம் 248 கிலோ பளுவை தூக்கி (ஸ்னாட்ச் முறையில் 113 கி. மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 135 கி.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இவரை விட ஒரு கிலோ அதிகமாக தூக்கிய மலேசிய வீரர் (ஸ்னாட்ச் முறையில் 107 கி. மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 142 கி.) தங்கம் வென்று அசத்தினார். இதையடுத்து இலங்கை வீரர் திலங்க யோதகே 225 கிலோ பளுவை தூக்கி வெண்கலம் பெற்றார். முன்னதாக பளுவை தூக்கும்போது சங்கேத் சர்கருக்கு துரதிஷ்டவசமாக காயம் ஏற்பட்டதால், கிளீன் & ஜெர்க் முறையின் மூன்றாவது வாய்ப்பில் 142 கிலோ பளுவை அவரால் வெற்றிகரமாக தூக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் தொடரில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவாகும்.
இதையும் படிங்க:டி -20 ஜாம்பவான்களை பந்தாடிய இந்தியா! இளம் வீரர்கள் அசத்தல்...