ஜப்பானில் நடைபெற்று வந்த உலகக் கோப்பை ரக்பி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 32-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது.