தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேற்றம்' - மான்செஸ்டர் யுனைடெட் அணி

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரொனால்டோ வெளியேற்றம்
ரொனால்டோ வெளியேற்றம்

By

Published : Nov 23, 2022, 9:27 AM IST

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ஆம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, 2018-ஆம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.

தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார். இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உலக கோப்பை கால்பந்து - ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பிரான்ஸ்

ABOUT THE AUTHOR

...view details