இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனையாக திகழ்ந்தவர் ரிது போகத். இவர் தற்போது தற்காப்பு கலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்று வந்த ஒன் சாம்பியன்ஷிப் தற்காப்பு கலைகள் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார்.
இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜோமரி டோரஸை நாக் அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் ரிது போகத் தொடர்ச்சியாக நான்கு முறை எம்.எம்.ஏ. (mixed martial arts) சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியும் சாதனைப் படைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிது போகத், “நான் தொடர்ந்து எனது வெற்றிக்காக உழைத்து வருகிறேன். ஜோமரியுடனான போட்டியும் அதற்கு சாட்சியாக இருந்தது. இது எளிதான வெற்றியாக இருந்தாலும், இனி வரும் போட்டிகள் எனக்கு சவாலானதாக இருக்கும் என்பதையும் நான் அறிவேன்.
மேலும் எனது அடுத்த இலக்காக ஒன் மகளிர் ஆட்டம்வெயிட் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஈஸ்ட் பெங்கால்?