பர்மிங்ஹாம்: காமன்வெல்த் 2022 தொடரின் கடைசிநாளான இன்று (ஆக. 8) மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், உலகின் 7ஆம் நிலை வீராங்கனையும், இந்தியாவைச் சேர்ந்தவருமான பிவி சிந்து, 13ஆவது நிலை வீராங்கனையான கனடாவின் மிச்செல் லீ உடன் மோதினார்.
காமன்வெல்த் 2022: தங்கம் வென்றார் பிவி சிந்து! - மிச்செல் லீ
காமன்வெல்த் தொடரின் மகளிர் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, கனட வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
Etv Bharat
இப்போட்டியில், பிவி சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் மிச்செல் லீயை வீழ்த்தி தங்கத்தை தட்டிச்சென்றார். காமன்வெல்த் தொடரில் பிவி சிந்து பெறும் முதல் தங்கம் இதுவாகும். இதுவரை இந்தியா, 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களுடன் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:CWG 2022: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணி!