2019-ஆம் ஆண்டிற்கான புரோ கபடி தொடரின் லீக் போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் 60ஆவது லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் பாதி முடிவில் 18-17 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா அணி, பெங்கால் அணியைவிட ஒரு புள்ளி அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தது.
அதன்பின் தொடங்கிய இரண்டாவது பாதியில் ஹரியானா அணி தனது அட்டாக்கில் கவனத்தை செலுத்தி எதிரணியின் டிஃபென்ஸை சிதறடித்தது.
ஒருகட்டத்தில் 28-29 என்ற நிலையில் யார் வெற்றி பெறுவார் என ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்தது. இறுதியில் தனது அபார ஆட்டத்தால் ஹரியான ஸ்டீலர்ஸ் அணி 36-33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
இதன்முலம் புள்ளிபட்டியளில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 31 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலுள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணி 34 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் நீடிக்கிறது.