முதல் சாம்பியன் யார்? தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் பலப்பரீட்சை:
இதுவரை இல்லாத வகையில் இம்முறை புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் போட்டிகள் பல்வேறு திருப்புமுனைகளுடன் நடைபெற்றுவருகின்றன.புரோ கபடி லீக் வரலாற்றில் இதுவரை இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் அண்டர் டாக்ஸாக இருந்த தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள், முதல்முறையாக இந்த சீசனின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நேருக்கு நேர் மோதவுள்ளன.
இதனால், இவ்விரு அணிகளில் எந்த அணி முதல்முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்திவந்தனர்.
குறிப்பாக, லீக் போட்டிகளின் முடிவுகளில் தபாங் டெல்லி விளையாடிய 22 போட்டிகளில் 15 வெற்றி, நான்கு தோல்வி, மூன்று டை என 85 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மறுமுனையில், பெங்கால் வாரியர்ஸ் அணி 22 ஆட்டங்களில் 14 வெற்றி, ஐந்து தோல்வி, மூன்று டை என 83 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தபாங் டெல்லியின் சூப்பர்ஸ்டார் நவின் குமார்:
தபாங் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறக் காரணமாக இருந்தவரே அந்த அணியின் இளம் ரைடர் நவின் குமார் என்றால் மிகையாகாது. அவர் தனது மிரட்டலான ஆட்டத்தால் இந்த சீசனில் 22 போட்டிகளில் 285 புள்ளிகளைப் பெற்றுள்ளார். டெல்லி அணியின் துருப்புச்சீட்டே நவின் குமார் என்றுதான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 10 போட்டிகளில் அவரை ஒருமுறைகூட அவுட்டாக்க முடியாமல் மற்ற எதிரணியினர் திணறியுள்ளனர்.
அதுமிட்டுமில்லாமல், புரோ கபடி லீக்கில் தொடர்ந்து 21 முறை 10 புள்ளிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், டெல்லி அணியில் உள்ள சந்திரன் ரஞ்சித், ஆல்ரவுண்டர் விஜய், மிராஜ் ஷைக் ஆகியோர் நவின் குமாருக்கு ரைடிங்கில் நல்ல கம்பெனியாக இருக்கின்றனர்.
பெங்கால் வாரியர்ஸின் கில்லி மனிந்தர் சிங்: