கொல்கத்தா: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, கடந்த வாரம் தனது பெற்றோருடன் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ள பிரக்ஞானந்தாவின் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
கேள்வி: டாடா சர்வதேச செஸ் போட்டி எப்படி இருந்தது?
பதில்: இந்த போட்டியை பற்றி நான் பெரிதாக சிந்திக்கவில்லை. எனது அணி மிகவும் பலமாக உள்ளது. இப்போதைக்கு ஒய்வில் இருக்கிறேன்
கேள்வி: உலக செஸ் சாம்பியன்ஷிப் பற்றிய அனுபவங்கள் பகிர முடியுமா?
பதில்: உலக சாம்பியன் ஆவதற்கு அனைத்து தகுதிகளும், திறமைகளும் என்னிடம் உள்ளது என நினைக்கிறேன் விரைவில் சாம்பியன் பட்டம் வெல்வேன் என நம்புகிறேன்.
கேள்வி: போட்டியில் போது ஏற்படும் அழுத்தத்தை எப்படி கையாளுகிறீர்கள்?
பதில்: போட்டியை பற்றி நான் கவலைப்படுவதில்லை. களத்தில் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முயல்வேன் அதனால் மன அழுத்தம் இருக்காது.
கேள்வி: உலக புகழ்பெற்ற வீரர் கார்ல்செனுக்கு எதிராக விளையாடிய அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: ஆன்லைனிலும் சரி ஆப்லைனிலும் சர் கார்ல்சென் இரண்டிலுமே மிகவும் வலிமையான ஒருவர். நான் அவருக்கு எதிராக விளையாடும் போது, அவர் அடுத்ததாக எந்த காய்யை நகர்த்துவார் என்றே சிந்திப்பேன். அவரிடம் இருந்து நான் எப்போதுமே கற்றுக்கொள்ளவே முயற்சிக்கிறேன். அவர் கடந்த 10 ஆண்டுகளாக உலக சாம்பியன்ஷிப்பில் சிறந்த வீரராக இருந்து வருகிறார்.