நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை ஆட்சியர் மேகராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அனந்தநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி... ஆர்வமுடன் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள்! - Namakkal Sports Meet
நாமக்கல்: மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 50மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், இறகு பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டு போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர். இதில் ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: பிக் பாஷ் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட மார்கஸ் ஸ்டோனிஸ்!