தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2022, 7:40 AM IST

ETV Bharat / sports

பாராலிம்பிக் வீரர்களுக்கு விசா மறுப்பு!

பாராலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை சிங்கராஜ் உள்பட 5 பேருக்கு விசா மறுக்கப்பட்டதால் பிரான்ஸில் நடைபெறும் பாராசூட்டிங் உலகக்கோப்பை நிகழ்ச்சியில் அவர்களால் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாராலிம்பிக் வீராங்கணை சிங்கராஜ் அதானா  உட்பட 5 பேருக்கு விசா மறுக்கப்பட்டதால்  பாராசூட்டிங் உலகக்கோப்பை நிகழ்சியில் பங்கேற்க முடியவில்லை!
பாராலிம்பிக் வீராங்கணை சிங்கராஜ் அதானா உட்பட 5 பேருக்கு விசா மறுக்கப்பட்டதால் பாராசூட்டிங் உலகக்கோப்பை நிகழ்சியில் பங்கேற்க முடியவில்லை!

விசா மறுக்கப்பட்டதால் பாராலிம்பிக் போட்டியில் இரட்டைப் பதக்கம் வென்ற சிங்கராஜ் அதானா உள்பட இந்திய பாரா துப்பாக்கிச் சுடுதல் குழுவைச் சேர்ந்த 6 பேர், பிரான்ஸின் Chateauroux இடத்தில் நடைப்பெறும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த விஷயம் டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக உதவி கேட்டு ட்வீட் செய்ததை அடுத்து வெளிச்சத்திற்கு வந்தது.

அவரின் ட்விட்டர் பதிவில் தனது பாதுகாப்பாளர் மற்றும் தாயார் ஷேவாதா ஜெவாரியா மற்றும் பயிற்சியாளர் ராகேஷ் மன்பட் ஆகியோருக்கு விசா மறுக்கப்பட்டதைக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து விமான நிலையத்தில் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், தலைமை தேசிய பயிற்சியாளரும் இந்திய பாரா ஷூட்டிங் தலைவருமான ஜெய் பிரகாஷ் நௌடியால், அவனி லெகாரா மற்றும் அவரது பயிற்சியாளர் மன்பட்டின் விசாக்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறினார். அனால் அவரது தாயாருக்கு விசா கிடைக்கவில்லை எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர் மூன்று பாரா ஷூட்ட்டி வீரர்களான சிங்கராஜ், ராகுல் ஜாகர் மற்றும் தீபிந்தர் சிங் (பாரா பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீரர்கள்) மற்றும் இரண்டு பயிற்சியாளர்களான சுபாஸ் ராணா (தேசிய பயிற்சியாளர்) மற்றும் விவேக் சைனி (உதவி பயிற்சியாளர்) ஆகியோருக்கும் விசா கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களின் விசா மறுக்கப்ப்டதற்கான காரணத்தை பிரான்ஸ் தூதரகம் குறிப்பிடவில்லை எனவும் ஜூன் 4 முதல் 13 வரை நடைபெறும் இந்த நிகழ்வு இந்திய பாரா துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக அனைவரும் கலந்துக்கொள்ள இயலவில்லை எனக் கூறினார்.

இது தொடர்பாக பதிலளிக்கும் வகையில் இந்திய விளையாட்டு ஆணையம் "பிரான்ஸ் செல்லும் இந்திய பாரா ஷூட்டிங் குழுவினரின் அனைத்து விசாக்களும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. அனைத்து விசாக்களையும் பெற MYAS மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மூலம் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த முறை முயற்சிகள் நிறைவேறவில்லை" என ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வெற்றிக்கோப்பையுடன் பேருந்தில் வலம்வந்த குஜராத் டைட்டன்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details