தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா குறித்த பயத்தில் டோக்கியோ ஒலிம்பிக் தன்னார்வலர்கள்! - ஜப்பானின் தேசிய ஒளிப்பரப்பு நிறுவனமான என்.ஹெச்.கே.

டோக்கியோ: 2020 டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் 60 விழுக்காட்டினர் கரோனா தாக்கம் குறித்து பயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கரோனா குறித்த பயத்தில் இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தன்னார்வலர்கள்!
கரோனா குறித்த பயத்தில் இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தன்னார்வலர்கள்!

By

Published : Jul 31, 2020, 9:33 PM IST

ஜப்பானின் தேசிய ஒளிப்பரப்பு நிறுவனமான என்.ஹெச்.கே. 2020 டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் குறித்து அதில் பங்கேற்கும் தன்னார்வலர்களிடம் இந்த மாதத்தில் (ஜூலை) ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்விற்கு கையெழுத்திட்ட 80 ஆயிரம் பேரில் 26 ஆயிரம் பேர் இந்த அமைப்பு வழங்கிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளனர்.

இந்த விளையாட்டை நடத்தும் போது உங்களுக்கு தோற்றும் கவலைக்கான முக்கியமான காரணம் என்ன? இதற்கு 66.8 விழுக்காட்டினர் இந்த விளையாட்டை எப்படி கரோனா பெருந்தொற்று தாக்காமல் இருக்கும், அப்படி விளையாட்டை நடத்தும் போது என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும், என தன்னார்வலர்கள் அந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாக என்.ஹெச்.கே. தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி அவர்களது பயிற்சி ஒத்திவைப்பட்டுள்ளதால், தங்களது வேலை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை என 34 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிலர் தன்னார்வலர்கள் பணிபுரியும் போது தொற்று ஏற்படும் அபாயம் குறித்து கவலையுள்ளதாகவும், மற்றவர்கள் விளையாட்டு உண்மையில் நடத்தப்படுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2021ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை 2020 டோக்கியோ ஒலிம்பிக் நடைபெற்றால் அப்போது நீங்கள் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்புகிறீர்களா? என அந்த நிறுவனம் தன்னார்வலர்களிடம் நேற்று (ஜூலை 30) கேட்டுள்ளது.

கரோனா குறித்த பயத்தில் இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தன்னார்வலர்கள்!

இந்நிலையில் டோக்கியோவில் நேற்று (ஜூலை 30) மட்டும் புதிதாக 367 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே கூறுகையில், “ஜப்பான் தலைநகரம் ஒரு சிக்கலான நிலையில் உள்ளது. இந்த பரவலை கொண்டிருந்தாலும், அடுத்த ஆண்டுக்குள் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 2020 டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் நடத்தப்படும்” என்றார்.

கடந்த 29ஆம் தேதிவரை டோக்கியோவில் 12 ஆயிரத்து 228 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50 விழுக்காடு கடந்த 10 நாள்களில் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க...பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன் - அஃப்ரிடி!

ABOUT THE AUTHOR

...view details