இந்தாண்டிற்கான புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 119ஆவது லீக் போட்டியில் புனேரி பால்தன் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் அட்டாக், டிஃபென்ஸ் என இரு பிரிவுகளிலும் சம பலத்துடன் மோதிக்கொண்டனர். இருந்தாலும் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் புனேரி பால்தன் அணி 31-16 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.
அதன்பின் தொடர்ந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமா விளையாடி தெலுகு அணி தனது புள்ளிக்கணக்கை உயர்த்த தொடங்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புனேரி அணியும் அவர்களை வீழ்த்தும் முனைப்பில் அதிரடி காட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.