#PKL2019 புரோ கபடி லீக்கின் 7ஆவது சீசனின் முதல் அரையிறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரவு நடந்தது. இதில், நடப்பு சாம்பியனான பெங்களூரு புல்ஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின.
முதல் பாதியில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான பவான் செரவாத்தின் வேகத்தைக் குறைக்க அவரை டேக்கிள் செய்வதிலேயே டெல்லி அணி கவனம் செலுத்தியது. இப்படி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது தபாங் டெல்லி அணி, பெங்களூரு அணியை 2 முறை ‘ஆல்-அவுட்’ செய்தது. இதனால் முதல் பாதி முடிவில் டெல்லி 26-18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது.