தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சமனில் முடிந்த தமிழ்தலைவாஸ் - யு.பி. யோத்தா போட்டி

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் - யு.பி. யோத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 28-28 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

kabbadi

By

Published : Aug 8, 2019, 3:15 AM IST

புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, யு. பி. யோத்தா அணியை எதிர்கொண்டது.

முதல் பாதியில் சீரிபாய்ந்த யு.பி. யோத்தா வீரர்கள் புள்ளிகளை அடுத்தடுத்து எடுத்துக்கொண்டே இருந்தனர். அதேசமயம், தமிழ் தலைவாஸ் அணி யு. பி. யோத்தாவின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது. இதனால், முதல் பாதி முடிவில் யு.பி. யோத்தா அணி 16-11 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதியில் கடைசி 10 நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் சிறப்பாக கம்பேக் தந்து அசத்தியது. குறிப்பாக, அணியின் டிஃபெண்டர் மஞ்சித்தால் யு. பி. யோத்தா அணி ஆல் அவுட் ஆனது. இதனால், இரு அணிகளும் 23-23 என்ற கணக்கில் சமனில் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, இரு அணிகளும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை மாறி மாறி பெற்றுக்கொண்டிருந்தது. இறுதியில், இப்போட்டி 28-28 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில் தமிழ்தலைவாஸ் அணி 17 புள்ளிகளை பெற்று மிரட்டியது. இப்போட்டியில் அதிகபட்சமாக தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டர் ராகுல் சவுதிரி, யு. பி. யோத்தா வீரர் ரிஷாங் ஆகியோர் ஐந்து புள்ளிகளை பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 35-26 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

ABOUT THE AUTHOR

...view details