தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#PKL: பாட்னாவிடம் தர்ம அடி வாங்கிய தமிழ் தலைவாஸ் - புரோ கபடி லீக்

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 25-51 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

Pro kabadi

By

Published : Sep 9, 2019, 11:19 PM IST

புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 83ஆவது லீக் போட்டியில் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பாட்னா பைரேட்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடியது. இருப்பினும், முதல் பாதி முடிவில் 18-13 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி முன்னிலை வகித்தது.

பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ்

இந்த நிலையில், இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி டிஃபெண்டிங், ரெய்டிங் இரண்டிலும் சொதப்பியது. அதன் காரணமாக, பாட்னா பைரேட்ஸ் அணியின் நட்சத்திர ரைய்டர் பர்தீப் நர்வால் ஒவ்வொரு ரெய்டிலும் புள்ளிகளை எடுத்துக்கொண்டே இருந்தார். இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 25-51 என்ற கணக்கில் படுத் தோல்வி அடைந்தது.

புள்ளிகளை வென்ற பர்தீவ் நர்வால்

இப்போட்டியில் அதிகபட்சமாக, பர்தீப் நர்வால் 26 புள்ளிகளை பெற்று அசத்தினார். கிட்டத்தட்ட தமிழ் தலைவாஸ் அணியைவிடவும் அவர் ஒரு புள்ளியை பெற்றிருந்தார். இதன்மூலம், புரோ கபடி லீக்கில் 1000ஆயிரம் புள்ளிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார். இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் விளையாடாதது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த வெற்றியின்மூலம், பாட்னா பைரேட்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் நான்கு வெற்றி, 10 தோல்வி என 25 புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது. அதேசமயம், இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்திருந்தாலும், விளையாடிய 15 ஆட்டங்களில் மூன்று வெற்றி, இரண்டு டிரா, 10 தோல்வி என 27 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு (11ஆவது)முந்தைய இடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details