தமிழ்நாடு

tamil nadu

#FIVBWorldcup: 'ஓங்கி அடிச்சா, எங்களுக்கு எல்லாமே பாயின்ட்தான்' - அசால்ட் செய்த கொரியா, டொமினிக்!

By

Published : Sep 27, 2019, 1:19 PM IST

மகளிர் உலகக் கோப்பை கைப்பந்து தொடரின் ஒன்பதாவது லீக் சுற்றில் தென்கொரியா, டொமினிக் குடியரசு அணிகள் வெற்றிப் பெற்று அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

#FIVBWorldcup

மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடர் ஜப்பான் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் தென்கொரியா அணி, கென்யா அணியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் கொரிய அணி 25-15, 25-16, 25-21 என்ற புள்ளிகளின் அடிப்படையில் மூன்று செட்களையும் கைப்பற்றி கென்யா அணியை அதிரடியாக வீழ்த்தியது.

இதன் மூலம் தென் கொரிய அணி 3-0 என்ற கணக்கில் கென்யாவை வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் கொரிய அணி புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளைப் பெற்று 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கென்யா அணி இத்தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்து, கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மற்றொரு ஒன்பதாவது லீக் சுற்று ஆட்டத்தில் டொமினிக் குடியரசு அணி, அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டொமினிக் அணி அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சியளித்தது.

இப்போட்டியில் டொமினிக் அணி 25-16, 25-23, 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது. இதன் மூலம் டொமினிக் குடியரசு அணி 3-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் அர்ஜென்டினா அணியை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் டொமினிக் குடியரசு அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால், அர்ஜென்டினா அணி 5 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலின் பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளத்து.

இதையும் படிங்க: #FIVBWorldcup: 'அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்' - ஜப்பானை அதிரடியாக வீழ்த்திய பிரேசில்!

ABOUT THE AUTHOR

...view details