ஜப்பானில் நடைபெற்று வரும் இந்தாண்டிற்கான உலகக்கோப்பை ரக்பி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நியூசிலாந்து அணி, வேல்ஸ் அணியை புரட்டி எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 40 -17 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை விழ்த்தியது.