ஹாங்சோ :ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.
19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜென்னா கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நீரஜ் சோப்ரா 88 புள்ளி 88 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜென்னா 87 புள்ளி 54 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தனது முதல் வாய்ப்பு முதலே 80 மீட்டருக்கும் மேலாக ஈட்டி எறிந்து வந்த நீரஜ் சோப்ரா தனது இறுதி வாய்ப்பில் 88 புள்ளி 88 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்தார். ஏற்கனவே அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :World Cup Cricket 2023: நாக் அவுட் சுற்றில் தடுமாற்றம்.. அவசரமா? பதற்றமா?! தொடரும் சஞ்சு சாம்சன் சர்ச்சை! - சடகோபன் ரமேஷ் கூறுவது என்ன?