தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மே 1 முதல் பயிற்சி தொடங்க கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கு அனுமதி!

மியாமி: கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துவருவதால், வரும் வெள்ளிக்கிழமை முதல் கூடைப்பந்து வீரர்கள் பயிற்சியைத் தொடங்க எம்பிஏ அனுமதியளித்துள்ளது.

nbato-allow-re-opening-of-practice-facilities-starting-friday
nbato-allow-re-opening-of-practice-facilities-starting-friday

By

Published : Apr 26, 2020, 12:46 PM IST

கரோனா வைரஸ் காரணமாக கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் மார்ச் 11ஆம் தேதியோடு ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து என்பிஏ சார்பாகப் போட்டிகள் நடத்துவது பற்றி எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே ஜார்ஜியா, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துவருகிறது. அதனால் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் ஊரடங்கிலிருந்து விலக்கு அறிவித்துவருகின்றன. இதனால் என்பிஏ சார்பாக கூடைப்பந்து வீரர்கள் தங்களது பயிற்சிகளை வெள்ளிக்கிழமை (மே 1) முதல் தொடங்கலாம் என அறிவித்துள்ளது.

ஆனால் அணியாக ஒன்றிணைந்து பயிற்சி செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. வீரர்கள் பயிற்சி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளைப் பற்றி ஆலோசனை செய்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் பயிற்சிகளைத் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்.ஹெச்.எல்., என்.பி.ஏ. ஆகிய இரு அமைப்புகளும் பல்வேறு தொடர்களை ஒரே நேரத்தில்தான் நிறுத்தினோம். அதனால் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின் தொடர்களைத் தொடங்குவது பற்றி ஆலோசனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தோனிதான் கேப்டன்: கோலி & ஏபிடி!

ABOUT THE AUTHOR

...view details