அமெரிக்காவின், நியூயார்க் கூடைப்பந்தாட்டக் கழகமான லாக்கர்ஸ் அணியின் முன்னாள் ஜாம்பவன் கோப் பிரைன்ட், அவரது மகள் ஜியானா பிரைன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இத்தகவலை நியூயார்க் தீயணைப்புத் துறையினரும் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இத்தகவலை அறிந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ' கோப் பிரைன்ட் அனைத்து காலங்களிலும், மிகச்சிறந்த கூடைப் பந்தாட்ட வீரராக வலம்வந்தவர். அதனால் தற்போது தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் அவர் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார். அதனை எதிர்காலத்திலும் பின்பற்ற எண்ணினார். மேலும் அவரது அழகான மகள் ஜியானாவின் இழப்பு இத்தருணத்தில் இன்னும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது' எனப் பதிவிட்டுள்ளார்.