திருச்சி தில்லைநகர் பகுதியிலுள்ள பிரபல தனியார் பள்ளியின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான செஸ் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியானது அப்பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உட்பட 8 மாநிலங்களைச் சேர்ந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இப்போட்டிகளில் ஐசிஎப், வங்கி அணிகளும் கலந்துகொள்கின்றன.
தேசிய அளவிலான செஸ் போட்டி இதில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் இப்போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு 50 கிராம் தங்க நாணயம், 420 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுகிறது. இதில் மொத்தம் 630 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போட்டி இன்று முதல் 4 நாட்கள் நடக்கவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'நான் இருக்கப்போ விளையாடிருந்தா ஸ்மித்தை காயப்படுத்தியிருப்பேன்' - சோயப் அக்தர்