மெல்போர்ன்:2022ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டி இன்று (ஜன. 28) நடைபெற்றது. இப்போட்டியில், 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ள ஸ்பெய்ன் வீரர் ரஃபேல் நடால், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி உடன் மோதினார்.
வெறித்தனம் காட்டிய நடால்
35 வயதான நடால், முதல் செட்டிலேயே தனது இயல்பான அதிவேக ஷாட்கள் மூலம் புள்ளிகளை பெற்று, செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
இன்னும் ஒரு செட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற போது, மூன்றாவது செட்டை மேட்டியோ 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி, ஆட்டத்தை நான்காவது செட்டிற்கு அழைத்துச் சென்றார்.