தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பந்தய சாலையில் சண்டையிட்ட பைக் ரேசர்கள்! - bike race

அலஜுலா: கோஸ்டா ரிக்காவில் நடைபெற்ற தேசிய மோட்டார் பைக் சாம்பியன்ஷிப் பந்தயத்தின்போது, பந்தய வீரர்கள் இருவர் சாலையில் இறங்கி சண்டையிட்டுக்கொண்ட வீடியோ காட்சி வைரலாகிவருகிறது. இதையடுத்து அந்த வீரர்களுக்கு பந்தயத்தில் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பந்தய சாலையில் வீரர்கள் சண்டையிடும் காட்சி

By

Published : Mar 25, 2019, 4:22 PM IST

Updated : Mar 25, 2019, 5:40 PM IST

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம், கோஸ்டா ரிக்கா தேசிய மோட்டார் பைக் சாம்பியன்ஷிப் பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தின்போது, சக பந்தய வீரரின் பைக்கில் மற்றொரு வீரர் உரசியதால் நிலைதடுமாறிய அந்த வீரரின் பைக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

அப்போது தன்னை இடித்த வீரரின் பைக்கில் தொற்றிக்கொண்ட அந்த வீரர், தொங்கியவாறு சிறிது தூரம் சென்றுள்ளார். பின் பைக்கை விட்டு கீழே இறங்கிய அந்த வீரர் தனது பைக் கீழே விழ காரணமாக அந்த நபருடன் பந்தய சாலையில் சண்டையில் ஈடுபட்டார். இதன் காரணமாக பந்தயம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

சண்டையிட்ட பைக் ரேஸர்களின் வீடியோ

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட லத்தீன் அமெரிக்க மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு, பந்தயத்தின்போது சண்டையிட்டுக்கொண்ட இரண்டு வீரர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது.

Last Updated : Mar 25, 2019, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details