சண்டிகர்: மில்கா சிங் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சண்டிகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரது மகன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ஒரே இந்திய தடகள வீரர் என்ற பெருமையை பெற்றவர் மில்கா சிங்.
1958, 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பந்தகம் வென்ற மில்கா சிங், 1956, 1960, 1964 என மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் என்பது கூடுதல் தகவல். அவரது சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்தில் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்வீட் செய்து வேகமாக டெலிட் செய்த அஸ்வின்: ஏன் தெரியுமா?