தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனாவால் வாழ்வாதாரத்திற்கு தவித்த விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி! - மத்திய விளையாட்டு அமைச்சகம்

மீரட்: உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வில்வித்தை வீரர் நீரஜ் செளகான், குத்துச்சண்டை வீரர் சுனில் செளஹான் ஆகியோருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பாக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

meerut-players-forced-to-sell-vegetables-get-rs-5-lakhs-each-from-govt
meerut-players-forced-to-sell-vegetables-get-rs-5-lakhs-each-from-govt

By

Published : Oct 7, 2020, 3:38 PM IST

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வில்வித்தை வீரர் நீரஜ் செளகான். இவரது சகோதரர் சுனில் செளஹான். இவர்கள் இருவரும் மாநில அளவில் பல்வேறு விருதுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

இவரது தந்தை மீரட்டில் உள்ள கைலாஷ் பிரகாஷ் விளையாட்டு மைதானத்தில் உணவகம் நடத்தி வந்தார். ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாழ்வாதாரத்திற்காக தெருக்களில் காய்கறிகள் விற்றுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பாக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் கிரன் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், ''விளையாட்டு அமைச்சகம் சார்பாக உத்தரப் பிரதேசத்தின் வில்வித்தை வீரர் நீரஜ் செளகான் மற்றும் குத்துச்சண்டை வீரர் சுனில் செளஹான் ஆகியோருக்கு தீன் தயால் உபத்யாயா நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது'' என பதிவிட்டார்.

சவாலான வாழ்க்கையை வாழ்ந்து வந்த விளையாட்டு வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பிரெஞ்சு ஓபன்: அரையிறுதிச் சுற்றில் நடால்!

ABOUT THE AUTHOR

...view details