ஆறு முறை உலக சாம்பியனான இந்தியாவின் எம்.சி. மேரி கோம் மற்றும் சக வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் தங்களது சமீபத்திய வெற்றிகளின் அடிப்படையில், நடைபெற உள்ள மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரி கோம்!
டெல்லி: ஆறு முறை குத்துசண்டை உலகச்சாம்பியானான இந்தியாவின் மேரிகோம் மற்றும் லோவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு நேரடியாகத் தேர்வாகியுள்ளனர்.
mary kom
இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்ற 36 வயதான மேரி கோம், (இந்தியா ஓபன் மற்றும் இந்தோனேசியாவில் சமீபத்தில் நடந்த போட்டி) 51 கிலோ பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக மற்றும் ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற போர்கோஹெய்ன் 69 கிலோ பிரிவில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.