பிரன்ஸ் :கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. பாரீஸ் நகரில் நடைபெற்ற விழாவில், நடப்பாண்டுக்கான பலோன் டி 'ஓர் விருது லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. தனது வாழ்க்கையில் எட்டாவது முறையாக பலோன் டி'ஓர் விருதை மெஸ்ஸி வென்றுள்ளார்.
பலோன் டி ஓர் விருது:கால்பந்து உலகின் மிக உயரிய பலோன் டி 'ஓர் விருது ஆண்டுக்கு ஒரு முறை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து பிபா வழங்கி வருகிறது. 1956 ஆம் ஆண்டு முதல் 60ஆண்டுகளுக்கு மேலாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் மட்டும் இந்த விருதானது அறிவிக்கப்படவில்லை.
பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 30 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் இடம் பெற்றனர்.
மும்முனை போட்டி:இதனையடுத்து நடப்பு ஆண்டில் இந்த விருதை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்நிலையில் ஆண்களுக்கான பிரிவில் கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.