தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2020, 4:36 AM IST

ETV Bharat / sports

ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணம்: சக வீரர்களை வறுத்தெடுத்த ஹாமில்டன்!

அமெரிக்காவில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ப்ளாய்டுக்கு நீதி கேட்டு நடத்தப்பட்டு வரும் போராட்டம் குறித்து பார்முலா ஒன் பந்தைய வீரர் லூயிஸ் ஹாமில்டன் தனது சக வீரர்களிடம் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினார்.

lewis-hamilton-overcome-with-rage-following-george-floyds-death
lewis-hamilton-overcome-with-rage-following-george-floyds-death

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவர் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. பல்வேறு நாடுகளிலும் இச்சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பார்முலா ஒன் எனப்படும் கார்பந்தயத்தில் ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற லூயிஸ் ஹாமில்டன் தனது சக பந்தைய வீரர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் இணைந்து உரையாடினார்.

அப்போது பேசிய அவர், 'உங்களில் சிலர் மௌனமாக இருப்பதை நான் காண்கிறேன். அதிலும் சிலர் மிகப்பெரும் நட்சத்திரங்களாக இருப்பினும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறீர்கள்.

நான் உள்ள இத்துறையில் எவருக்கும் சுய அடையாளம் என்பது இல்லை போல தெரிகிறது. அதனால் இவ்விளையாட்டு வெள்ளை இனத்தவருக்கான விளையாட்டாக மாறிவிட்டது. அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன், ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அதில் நான் மாறுபட்டவனாக உள்ளேன்.

மேலும், நீங்கள் இந்த அநீதியை பார்த்து ஏதெனும் சொல்லுவீர்கள் என நினைத்தேன். ஆனால் நீங்கள் எங்களுடன் நிற்க போவதில்லை. ஏனென்றால் நீங்கள் யார் என்று எனக்கு தெரியும்' என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details