தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய ஓபன் பேட்மிண்டன்: உலக சாம்பியனை வீழ்த்திய இளம் இந்திய வீரர் - பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி 2022 தொடரின் இறுதி போட்டியில், உலக சாம்பியனான லோ கீன் யீவ்வை வீழ்த்தி இந்தியா வீரர் லக்சயா சென் சாதனை படைத்துள்ளார்.

Lakshya Sen wins India Open
Lakshya Sen wins India Open

By

Published : Jan 17, 2022, 2:20 AM IST

டெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் 2022 நடந்துவருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியா இளம் வீரர் லக்சயா சென் கலந்துகொண்டார். முன்னதாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய வீரர் நிக் சீ யாங்குடன் மோதினார். ஆட்டத்தின் இறுதியில் 19-21 21-16 21-12 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல சிங்கப்பூரைச் சேர்ந்த உலக சாம்பியனான லோ கீன் யீவ், அரையிறுதி ஆட்டத்தில் கனடா வீரர் பிரையன் யாங்குடன் விளையாட இருந்த நிலையில், பிரையனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து விலகவே லோ கீன் யீவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று(ஜன.16) இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், ஆரம்பம் முதலே துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்சயா சென் 24-22, 21-17 என்ற செட் கணக்கில் லோ கியானை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் உலக சாம்பியன் பட்டம் பெற்றார். இளம்வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், விளையாட்டு வீரர்களின் பாராட்டுகளை பெற்றுவருகிறார். இதுகுறித்து லக்சயா சென் கூறுகையில், "இது எனக்கு மிகப் பெரிய போட்டி. பயத்துடன் போராடி வெற்றி பெற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்"என்றார்.

இதையும் படிங்க:ஆஷஸ் தொடர்: இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

ABOUT THE AUTHOR

...view details