உலகின் கூடைப்பந்து ஜாம்பவானாக வலம் வந்தவர் நியூயார்கின் லாக்கர்ஸ் அணியின் முன்னாள் வீரர் கோப் பிரைன்ட். இவர் நேற்று தனது 13 வயது மகள் ஜியானாவுடன், கலிபோர்னியாவிலுள்ள ஒரு கல்லூரி அணிக்கு பயிற்சியளிப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.
அப்போது, கலபாசஸ் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதில் கோப் பிரைன்ட், அவரது மகள் ஜியானா, கல்லூரி பேஸ்பால் பயிற்சியாளர் ஜான் அல்தோபெல்லி, ஹெலிகாப்டர் பைலட் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோப் பிரைன்ட் அவரது மகள் ஜியானா மேலும் இந்த விபத்து குறித்து நியூயார்க் தீயணைப்பு துறையினர் கூறுகையில், ஹெலிகாப்டரில் அளவுக்கதிகமான ஆட்கள் சென்றதால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவளித்துள்ளனர்.
அமெரிக்க கூடைப்பந்து வீரரான கோப் பிரைன்ட் சர்வதேச அளவில் கூடைப்பந்தாட்டத்தின் ஜாம்பாவானாக வலம் வந்தவர். மேலும் 1996ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் புகழ்பெற்ற லாக்ர்ஸ் கூடைப்பந்து கழகத்தின் சாற்பாக விளையாடிவந்தார். அதன்பின் 2013ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட தொடர் காயங்கள் காரணமாக 2016ஆம் ஆண்டு சர்வதேச கூடைப்பந்து போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
மேலும் 20 ஆண்டுகள் கூடைப்பந்தாட்ட ரசிகர்களை தன் பக்கம் வைத்திருந்த கோப் பிரைன்ட், சக அணியின் நட்சத்திர வீரரான லெப்ரான் ஜேம்ஸின் சாதனைகளை முறியடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். தற்போது 41 வயதான கோப் பிரைன்ட், அவரது 13 வயது மகள் ஜியானா ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் மூத்த கிரிக்கெட்டருக்கு 100ஆவது பிறந்தநாள் கொண்டாடிய சச்சின், ஸ்டீவ் வாக்!