ராஜ்கோட்:இந்தியாவின் ஒலிம்பிக் என கூறப்படும் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா , ராஜ்கோட் மற்றும் பவநகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் அணி ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நான்கு பேர் கொண்ட 4x200 மீட்டர் தொடர் நீச்சல் ரிலே போட்டியில் கர்நாடக வீராங்கனை ஹசிகா ராமசந்திரா வெற்றிக்கான இலக்கை போராடி அடைந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அஸ்தா சவுத்ரிக்கு அடுத்து 2 நிமிடங்கள் 19.12 நொடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
ஆண்களுக்கான 200மீ பட்டாம்பூச்சிப் போட்டியில் சஜன் பிரகாஷ் வெற்றி பெற்றார். இதனையடுத்து இரண்டு வயது குழந்தையின் தாயான மகாராஷ்டிரா டைவர் ஹ்ருத்திகா ஸ்ரீராம் இலக்கை கடந்து தனிநபர் ட்ரெபிளைப் பூர்த்தி செய்தார். பெண்களுக்கான 10மீ பிளாட்ஃபார்ம் போட்டியில் வெற்றி பெற்று தங்க ஹாட்ரிக் சாதனையை தொடர்ந்தார்.
பதக்கப் பட்டியல் :தற்போது 40 தங்கம் மற்றும் 89 பதக்கங்களுடன், சர்வீசஸ் அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஹரியானா 25 தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 24 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்று வரை நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 25 அணிகள் குறைந்தபட்சம் ஒரு தங்கம் மற்றும் 32 அணிகள் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளன.
டென்னிஸில் தங்கம்:அகமதாபாத்தில் உள்ள ரிவர்ஃபிரண்ட் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் வளாகத்தில் நடைபெற்ற பெண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் விளையாடிய குஜராத் வீராங்கனை ஜீல் தேசாய் அவரது சொந்த மாநிலத்திற்கு தங்கம் பெற்று தந்தார். நடப்பு சாம்பியனான அங்கிதா ரெய்னா இல்லாத நிலையில், மூன்றாம் நிலை வீராங்கனையான ஜீல் தேசாய் 6-2, 3-2 என்ற கணக்கில் கர்நாடகாவின் சர்மதா பாலுவை வீழ்த்தினார். இந்த ஒற்றையர் பிரிவின் வேறொரு போட்டியில் மகாராஷ்டிராவின் அர்ஜுன் காதேவிற்கு ஏற்பட்ட உடல் பிரச்சனைகளால் தமிழ்நாட்டின் மணீஷ் சுரேஷ்குமா 2-6, 6-1, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.