தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் பெண்களுக்கான கைப்பந்து தகுதி சுற்றில் இத்தாலி, அமெரிக்கா, செர்பியா அணிகள் தேர்வு - qualified

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர்களுக்கான பெண்கள் கைப்பந்து போட்டிகளின் தகுதி சுற்று ஆட்டங்களில் இத்தாலி, அமெரிக்கா, செர்பியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Italy sweep aside the Netherlands to qualify for the 2020 Olympics

By

Published : Aug 5, 2019, 10:54 AM IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர்களுக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைப்பெற்ற பெண்கள் கைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

இத்தாலி vs நெதர்லாந்து

ஆரம்பம் முதலெ விருவிருப்புடன் தொடங்கிய ஆட்டத்தில், இத்தாலி அணி 25-23, 25-17, 25-22 என்ற புள்ளிகணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.

அமெரிக்கா vs அர்ஜண்டினா

இதையடுத்து, நேற்று நடைபெற்ற மற்றொரு தகுதி சுற்று போட்டியில் அமெரிக்க, அர்ஜெண்டினா அணிகள் மோதின. இதில் அர்ஜெண்டினாவை 25-22, 25-17, 25-13 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிகளுக்கு அமெரிக்கா தகுதி பெற்றது.

செர்பியா vs போலந்து

மேலும் நடைபெற்ற மற்றொரு போட்டியில் செர்பியா, போலாந்து அணிகள் மோதின. இதில் 25-21 என முதல் செட்டை போலாந்து அணியிடம் இழந்த செர்பியா 25-23, 25-16, 25,23 என்ற புள்ளி கணக்கில் மீதமுள்ள செட்களில் போலாந்து அணியை வென்று ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.

இதன் மூலம் ஒலிம்பிக் தொடர்களுக்கான பெண்கள் கைபந்து போட்டியில் அமெரிக்கா, செர்பியா, இத்தாலி ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details