பாகு: உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் நூலிழையில் வெள்ளிப் பதக்கத்தை கோட்டை விட்ட இந்திய வீரர் அகில் ஷியோரன், அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார்.
ஐ.எஸ்.எஸ்.எஃப். உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சூடுதல் போட்டி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 50 மீட்டர் ரைபில் 3வது பொஷிசன் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த அகில் ஷியோரன் கலந்து கொண்டார். திறமையான ஷாட்டுகளை மேற்கொண்ட அகில் ஷியோரன் ஒட்டுமொத்தமாக 450 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஷ்மிர்ல் 462.2 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், செக்குடியரசின் பீட்டர் நிம்பர்ஸ்கி 459.2 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். இந்தியாவின் ரிதம் சங்வான், இஷா சிங், மனு பாக்கர் ஆகிய மூவரும் குழு பிரிவின் 25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றனர்.
ரிதம் சங்வான் மட்டும் 583 புள்ளிகளுடன் இறுதி போட்டியில் எட்டவது இடத்தை பிடித்தார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா முன்று தங்கம் மற்றும் முன்று வெண்கலம் கைப்பற்றி பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. அதேநேரம் ஏழு தங்கம், முன்று வெள்ளி மற்றும் முன்று வெண்கல பதக்கக்கங்களுடன் சீனா முதல் இடத்தில் உள்ளது.