சீனாவின் வூஹான் நகரில் தொற்றிய கொவிட்-19 வைரஸ் (கொரோனா வைரஸ்) அந்நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் இதுவரை 2,715 உயிரிழிந்துள்ளதாகவும், 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைத்துள்ளதாகவும், சீன அரசு தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, சீனாவில் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வரும் மார்ச் 15 முதல் 26வரை டெல்லியில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரிலிருந்து சீனா,வடகொரியா, ஹாங்காங், துர்க்மெனிஸ்தான், தைவான், மகாவ் ஆகிய ஆறு நாடுகள் விலகியுள்ளதாக, இந்திய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் கூறுகையில், "மற்ற நாட்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சீனா புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேற்கூறிய ஆறு நாடுகள் மட்டுமின்றி பாகிஸ்தானும், இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளது.