தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முனையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி - ஜப்பான் தலைநகர் டோக்கியோ

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

'carbon-neutral'
'carbon-neutral'

By

Published : Jan 2, 2020, 9:00 AM IST

இந்தாண்டு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்வு, டோக்கியோ ஒலிம்பிக்தான். ஏனெனில் ஊக்கமருந்து சர்ச்சை, ரஷ்யாவிற்குத் தடை என பல்வேறு பிரச்னைகளுடன் இந்தாண்டு ஒலிம்பிக் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியினால் ஏற்படும் காற்று மாசு, கார்பன் அதிகரிப்பை குறைக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான தாமஸ் பாச்

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான தாமஸ் பாச் கூறுகையில், "இந்தாண்டு ஒலிம்பிக் தொடரை சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி எலக்ட்ரானிக் கார்களை உபயோகப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி பதக்கங்கள் தயாரித்தல் ஆகிய பணிகளுக்குத் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'தற்போதுதான் பாகிஸ்தான் அணி சரியான பாதையில் செல்கிறது' - மிஸ்பா உல் ஹக்!

ABOUT THE AUTHOR

...view details