தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்வதேச கராத்தே தொடர் - பதக்கங்களைக் குவித்த தமிழ்நாடு - பதக்கங்களை வென்று சாதனை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் மாணவர்கள் எட்டு பேர் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் மூன்று பிரிவுகளில் 12 தங்கங்கள், 9 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

International level karate gold medal 12 winners
International level karate gold medal 12 winners

By

Published : Dec 28, 2019, 4:49 PM IST

இலங்கை நாட்டின் கண்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி முதல் சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் உலக அளவில் 24 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ்நாட்டிலிருந்ல்து கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராம பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள் பள்ளியின் தலைவர் கிராண்ட் மாஸ்டர் சிகான் சுந்தர் தலைமையில் இந்த போட்டியில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதன்படி ராகவ், அஜய், ஆஸ்டல் ஆரோன், ராம் கிஷோர், விஷ்வா, கெவின் அருள் சகாய ரீகன், அபிநயா எழில், சுகிக்ஷா ஆகிய 8 மாணவர்களும் கட்டா, கும்மிடி, டி. கட்டா ஆகிய 3 பிரிவுகளில் 12 தங்கங்கள், 9 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் 2020 அட்டவணை...

ABOUT THE AUTHOR

...view details