தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் மெகா ஏலம் 2022: எத்தனை வீரர்கள்... எத்தனை கோடிகள்... A to Z தகவல்கள்... - ipl auction 2022 csk players list

ஐபிஎல் 2022 தொடரின் மெகா ஏலம் குறித்த A to Z தகவல்களை இங்கு காண்போம். மொத்தம் 10 அணிகள், 817 விளையாட்டு வீரர்கள், இரண்டு நாள்கள் மெகா ஏலம் நடைபெறுகிறது.

indian-premier-league-all-that-you-need-to-know-about-auctions
indian-premier-league-all-that-you-need-to-know-about-auctions

By

Published : Feb 11, 2022, 7:58 PM IST

Updated : Feb 11, 2022, 8:07 PM IST

பெங்களூரு:ஐபிஎல் 2022 தொடர் இந்தாண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. இதற்கான மெகா ஏலம் நாளை(பிப் 11), நாளை மறுநாள்(பிப் 12) என்று இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இந்த சீசனில் புதிய அணிகள் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் உள்பட 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. 227 வெளிநாட்டு வீரர்கள், 590 உள்நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஏலம் குறித்த முழு தகவல்கள் பின்வருமாறு.

  • இடம்: பெங்களூரு(ஐடிசி கார்டேனியா நட்சத்திர விடுதி)
  • நேரம்:நண்பகல் 12 மணி
  • ஏலம் நடத்துபவர்:ஹக் எட்மீட்ஸ்
  • ஒளிபரப்பு:டிஸ்னி+ஹாட்ஸ்டார்
  • அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
  • அதிகபட்ச ஏலத்தொகை: 90 கோடி ரூபாய்
  • குறைந்தபட்ச ஏலத்தொகை:67.5 கோடி ரூபாய்
  • அதிகபட்சமாக எத்தனை வீரர்கள் ஏலம் எடுக்கலாம்:25
  • குறைந்தபட்சம் எத்தனை வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும்:18
  • வீரர்களின் ஆரம்ப ஏலத்தொகை வகைகள்: ரூ.2 கோடி, ரூ.1.5 கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம்
  • முதல் நாளில் எத்தனை வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவர்: 161
  • ஏலத்தின் மூத்த வீரர்: தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் வயது 43
  • ஏலத்தில் இளைய வீரர்:ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது வயது17
  • அணிகளின் கையிருப்பு தொகை:சென்னை சூப்பர் கிங்ஸ்(ரூ.48 கோடி), மும்பை இந்தியன்ஸ்(ரூ.48 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ரூ.57 கோடி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(ரூ.68 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ்(ரூ.62 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(ரூ.48 கோடி), டெல்லி கேபிடள்ஸ்(ரூ.47.5 கோடி), பஞ்சாப் கிங்ஸ்(ரூ.72 கோடி), குஜராத் டைட்டன்ஸ்(ரூ.52 கோடி), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்(ரூ.59 கோடி)
  • முக்கிய மற்றும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்: எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், கீரன் பொல்லார்ட்
  • அதிக விலை இந்திய வீரர்கள்(ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை):ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷிகர் தவான், தேவ்தட் படிக்கல், தீபக் ஹூடா
  • மூத்த வீரர்கள்(ரூ.5 கோடி மதிப்பில்):புவனேஷ்வர் குமார், தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, அஸ்வின், உமேஷ் யாதவ், மோ ஷமி
  • இந்திய வீரர்கள்(ரூ. 5 கோடிக்கும் மேல்):ஷாருக்கான், ரவி ஸ்ரீனிவாஸ் சாய் கிஷோர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ராகுல் சாஹர், ரிங்கு சிங்
  • அதிக விலை வெளிநாட்டு வீரர்கள்(ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை):டேவிட் வார்னர், குயின்டன் டி காக், ககிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ்
  • 19 வயதுகுட்டப்பட வீரர்கள்:ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ராஜ் அங்கத் பாவா, விக்கி ஓஸ்ட்வால், யாஷ் துள்
  • சையத் முஷ்டாக் டி20 மற்றும் விஜய் ஹசாரே டிராபி வீரர்கள்: யாஷ் தாக்கூர், அபினவ் மனோகர், முஜ்தபா யூசுப், மயங்க் யாதவ், ரித்விக் ராய் சவுத்ரி, அபிஷேக் சர்மா
Last Updated : Feb 11, 2022, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details