தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா - ஆசிய கோப்பை கால்பந்து சுற்றுக்கு தகுதி - சுனில் செத்ரி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

asia cup
ஆசிய கோப்பை

By

Published : Jun 15, 2022, 10:23 AM IST

கொல்கத்தா:ஆசிய கால்பந்து கோப்பை தகுதி சுற்று போட்டி , கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. இதில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி நேற்று ஹாங் காங் அணியை எதிர்கொண்டது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் , கம்போடியா அணிகளை இந்தியா வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், நேற்றைய போட்டி சம்பிரதாயமாக அமைந்தது.

உள்ளூர் ரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் களமிறங்கிய இந்திய அணி போட்டியின் 2வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தியது. ஆஷிக் கிராஸ் கொடுத்த பந்தை அன்வர் அலி கோல் வலைக்குள் செலுத்தி அசத்தினார். 45வது நிமிடத்தில் கேப்டன் சுனில் செத்ரியும் , 85வது நிமிடத்தில் முன்கள வீரர் மன்வீர் சிங்கும் கோல் அடித்தனர்.

ஆட்டம் முடியும் நேரத்தில் இஷான் கோல் அடிக்க , இந்தியா 4க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டு முறை இந்தியா ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. 1964,1984,2011,2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை!

ABOUT THE AUTHOR

...view details