ஹாங்சோ (சீனா): ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், இன்று (அக்.7) நடைபெற்ற பெண்கள் கபாடி பிரிவில் இந்திய பெண்கள் கபாடி அணி தங்கப்பதக்கத்தை வென்று உள்ளது. சீனாவை 26-25 என்ற புள்ளிக் கணக்கில் வென்றதன் மூலம், இந்தியா தனது தங்கப்பதக்க வேட்டையத் தொடர்கிறது. அதிலும், ஆட்டத்தின் கடைசி இரண்டு ரைடில் இந்திய வீராங்கனைகள் த்ரில்லிங்கான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதிலும், கபாடி வீராங்கனை பூஜாவின் அபாரமான ரைடில் இந்தியா, ஆட்டத்தின் பாதி நேரத்திலேயே 5 புள்ளிகள் முன்னிலை வகித்தது. அதேநேரம், இந்த ஆட்டத்தின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களைக் கடந்துள்ளது. இந்த சாதனையை வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தியா படைத்துள்ளது. இதன்படி, இதுவரை இந்தியா 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் ஆகியவற்றுடன் சர்வதேச அரங்கில் ஜொலித்து வருகிறது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உள்ள தனது X வலைத்தளப் பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.